18ஆவது மக்களவையின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த உடனே அக்னி வீர் திட்டம் ரத்து செய்யப்படும் எனவும், நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்களுக்கு வேலை கொடுக்க மனம் இல்லாததால் தான், அரசு வினாத்தாள்களை கசியவிடுவதாகவும் விமர்சித்துள்ளார்.