தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (61) என்பவர் தனது வீட்டுக்கு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். அங்கு நேற்று அதிகாலை 5 மணியளவில் கடையை திறந்தபோது உள்ளே இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த இளைஞர் விஸ்வநாத் (25) என்பதும், கடையில் திருட முயன்றபோது போதையில் இருந்ததால் அங்கேயே அசந்து தூங்கியதும் தெரியவந்துள்ளது.