திருமண விருந்தில் மீன் மற்றும் இறைச்சி இல்லாததால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. தியோரியா மாவட்டத்தில் தினேஷ் ஷர்மா என்பவருக்கு சுக்லா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திருமண ஊர்வலம் நடந்துள்ளது. அப்போது விருந்தில் அசைவம் இல்லாததால் பிரச்னை வெடித்துள்ளது. மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரை தாக்கியதையடுத்து திருமணம் நின்றுள்ளது.