பிரிட்டனில் உள்ள சார்க் தீவில் உலகின் மிகச்சிறிய சிறைச்சாலை உள்ளது. இது இரண்டு கைதிகளுக்கான இரண்டு அறைகளைக் கொண்டுள்ளது, அவர்களுக்கு இடையே ஒரு குறுகிய நடைபாதை உள்ளது. மேலும் அதன் மேற்கூரை மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
\இந்த சிறை 1857ல் கட்டப்பட்டு இன்னும் பயன்பாட்டில் உள்ளது. ஏதேனும் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் 2 நாட்கள் மட்டும் இந்த சிறையில் அடைக்கப்படுவர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் கிரேஞ்ச் தீவில் உள்ள பிரதான சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.