அதிமுக பாஜகவின் மற்றொரு அங்கமல்ல அல்ல என முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். பாஜகவோடு, அதிமுக கூட்டணி மட்டுமே வைத்திருந்ததாக தெரிவித்த அவர், முதுகில் குத்திவிட்டார்கள் என்று அண்ணாமலை பேச்சு அநாகரிகத்தின் உச்சம் என விமர்சித்துள்ளார். நம்மோடு கூட்டணி வைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில், அண்ணாமலை அதிமுகவை குறை சொல்வதை ஏற்க முடியாது எனவும் கூறியுள்ளார்.