கர்நாடகாவில் ஒரு குழந்தை 25 விரல்களுடன் பிறந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. கொன்னூரை சேர்ந்த பாரதி (35) என்பவர் சமீபத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தையின் ஒரு கையில் 7 விரல்களும், மற்றொரு கையில் 6 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்கள் இருந்துள்ளன. எனினும், குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.