சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் ஏற்பாட்டில் இவர்கள் இணைந்துள்ளனர். மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையேயான மோதல் தலை தூக்கி உள்ளதால் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இருக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.