பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் கார்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. அதன்படி Federation of Automobile Dealers Associations வெளியிட்டுள்ள தகவலில், பழைய ஹேட்ச்பேக் ரக Swift கார்களுக்கு 15,000 முதல் 20,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி Alto K10 காரில் பெட்ரோல் வேரியண்டுக்கு 42,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கிறது.
அதனைப்போலவே மாருதி சுசுகி WagonR கார்களுக்கு 25,000 முதல் 30,000 ரூபாய் வரையிலும், ஹூண்டாய் Grand i10 கார்களுக்கு 18,000 முதல் 35,000 ரூபாய் வரையிலும் தள்ளுபடி கிடைப்பதாக தெரிகிறது. டாடாவின் Nexon மாடல் கார்களுக்கு 56,000 ரூபாய் மற்றும் Tiago மாடல் கார்களுக்கு 35,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது.