பாரீஸ் நகரில் ஓடும் சென் நதி சுத்தமானது என்பதை நிரூபிக்க அந்நகரின் மேயர் ஆனி ஹிடல்கோ அதில் நீந்தி காட்டினார். இந்தாண்டு ஒலிம்பிக் அந்நகரில் நடைபெறவுள்ள நிலையில் சென் நதி அசுத்தமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். அதனை ஒரு மாதத்தில் சுத்தம் செய்து நீச்சலடித்துக் காட்டுவேன் என்று கடந்த மாதம் அவர் சபதமிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று அந்த சபதத்தை நிறைவேற்றினார்.