ரீல்ஸ் உலகத்தில் அனைவருக்கும் நடிக்கும் ஆசை இருக்கிறது என நடிகை மயூரி காயத்திரி தெரிவித்துள்ளார். சினிமாவில் சாதிக்க ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி அவசியம் என்ற அவர், நடிக்கும் திறனை வளர்ப்பதற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிறந்த மேடையாக இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து நடிப்பதன் மூலம் தினமும் ஏதாவது புது விஷயங்களை கற்றுக்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.