தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் விபத்தில் சிக்கும்போது உயிரிழப்பு மற்றும் காயம் போன்றவை ஏற்பட்டால் காப்பீடு கோருவதில் சிக்கல் உள்ளது. இதனை சுட்டிக்காட்டி 800 ஆம்னி பேருந்துகளுக்கு மாநில போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. மேலும் அனுமதி இல்லாத பேருந்துகளில் பயணிக்க வேண்டாம் எனவும் அத்துமீறி பயணிகள் பயணித்தால் பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்படுவர் என்றும் அரசு எச்சரித்துள்ளது.