வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு அளித்து தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐஏஎஸ், கடந்த வாரம் வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், முதல்வரின் முகவரி திட்டம், மக்களுடன் முதல்வர் மற்றும் குறை தீர்க்கும் திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.