தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற ஜூலை 22 அல்லது 27ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லலாம் என்றும் அங்கு 10 நாட்களில் வரை அவர் தங்கியிருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் அவர் யாரை சந்திப்பார் என்பது உள்ளிட்டவற்றை அமைச்சர் டிஆர்பி ராஜா கவனித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.