அமேசானில் இருந்து வந்த பார்சலுக்குள் ராட்சத பல்லி உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண் அமேசானில் ஏர் ப்ரையர் ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். பார்சலை பிரித்தபோது அதில் ஒரு ராட்சத பல்லி உயிருடன் இருந்துள்ளது.
இந்த நிலையில், அந்த பெண் தன்னுடைய X தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்ட நிலையில் தவறுக்கு மன்னிப்பு கோருகிறோம். இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று அமேசான் உறுதியளித்துள்ளது.