தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் – ராதிகா திருமணம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது குடும்பத்தினருடன் பங்கேற்றிருந்தார். ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி என பிரம்மாண்டமாக விழா நடைபெற்ற நிலையில், தோனியும் தனது பங்குக்கு அசத்தலாக நடனம் ஆடி மகிழ்ந்தார். அதேபோல அவரது அருகில் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனும் சூப்பராக டான்ஸ் ஆடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.