சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை ரூ.21 கோடி செலவில் மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாகப் பராமரிக்கவும், சுவையான தரமான உணவை தயாரித்து வழங்கவும் முதல்வர், பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளார். இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அம்மா உணவகங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.