கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களை சந்தித்து சசிகலா ஆறுதல் தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கள்ளச்சாராயம் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு அதிகாரியை சஸ்பெண்ட் செய்தால் அடுத்து வருபவர்கள் ஒழுங்காக இருப்பார்கள். இந்த நிகழ்விற்கு பிறகாவது உங்களை திருத்திக்கொள்ளுங்கள். அனைத்து சடலங்களையும் ஒன்றாக வைத்து இறுதிச்சடங்கு வைப்பது வேண்டாம் என தெரிவித்துள்ளார்.