தமிழக அரசுப் பள்ளிகளில் கழிப்பறை, ஆய்வகம்,வகுப்பறைகள் கட்டுவதற்கு, நடப்பாண்டில் ₹1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும், பள்ளிகளின் சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறை கட்டடங்களின் சுவர்கள் மேம்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.