அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். 2 கட்ட கலந்தாய்வு முடிவடைந்திருக்கும் நிலையில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியிருப்பதால் மீண்டும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூலை 5ஆம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களை கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கைகள் ஜூலை 8ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.