கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பான வழக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசுப் பள்ளிகள் சாதிப் பெயரில் இருக்கலாமா என கேள்வி எழுப்பிய அவர், தெருக்களில் சாதி பெயரை நீக்கியதை போல, அரசு பள்ளிகளில் நீக்கும்படி அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை ஆக. 9க்கு ஒத்திவைத்தார்