தமிழகத்தில் அரசு சார்பில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும்தமிழகத்தில் அரசு சார்பில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். குழந்தையின்மை பிரச்சனையை போக்க ஆயிரக்கணக்கான தம்பதிகள் தனியார் மருத்துவமனைகளில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களை நாடி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகளிலும் அந்த வசதி செய்து தரப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்த தகவல் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.