சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் கிண்டியில் உள்ள உயர் சிறப்பு மருத்துவமனையை உலகத் தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், கிண்டி மருத்துவமனையில் இதுவரை 7.90 லட்சம் ரத்தப் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.
ஒரே ஆண்டில் புறநோயாளிகளாக 3.13 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உள்நோயாளிகளாக 66,855 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் 2,315 பேருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.