அரசு முறை பயணமாக வருகின்ற ஜுலை 8 ஆம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா செல்ல உள்ளார். ரஷ்யாவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொள்கிறார். பிரதமரின் பயணம் வருகின்ற 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. 8 மற்றும் 9ம் தேதிகளில் மாஸ்கோவில் நடைபெறும் 22வது இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அத்துடன், மாஸ்கோ மற்றும் வியன்னாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி ஆஸ்திரியா செல்ல உள்ளார்.