பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்வதற்கு முன்னர் டெல்லி சென்ற அவர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு மரியாதை நிமித்தமாக நேரில் சென்றார். அப்போது கெஜ்ரிவாலின் பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார். பின்னர் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.