ஆங்கிலப் பள்ளிகள் மீதான பெற்றோர்களின் மோகம், தற்கொலைக்கு சமம் என தேசிய ஆராய்ச்சி கல்வி மற்றும் கவுன்சிலின் தலைவர் டி.பி.சக்லானி கூறியுள்ளார். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தனியார் பள்ளிகளில் பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் பணிபுரிவதாகவும், ஆங்கிலப் பள்ளிகள் மீதான மோகத்தால் பெற்றோர்கள் அங்குச் சென்று தங்களது பிள்ளைகளை படிக்க வைப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்