ஆடி மாதம் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. அப்போது பூஜைகள் ஏதும் நடத்தப்படாது. மீண்டும் கோவில் நடை அடைக்கப்பட்டு ஆடி மாத பிறப்பான நாளை அதிகாலை ஐந்து மணிக்கு நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனை முன்னிட்டு பக்தர்கள் விர்ச்சுவல் க்யூ ஆர் கோடு மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.