ஆடி வெள்ளியை ஒட்டி, பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மதுரையில் ரூ.600க்கு விற்பனையான மல்லிப்பூ, இன்று ரூ.800க்கு விற்பனையாகிறது. தேனி ஆண்டிப்பட்டி சந்தையில் மல்லிகை, கனகாம்பரம் பூக்களின் விலை கிலோ தலா 500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ, முல்லைப்பூ தலா 350 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆடி மாதம் தொடங்கியிருப்பதால், கோயில் விழாக்கள், கூழ்வார்த்தல் போன்றவை காரணமாக, பூ விலை அதிகரித்துள்ளது.