பெங்களூருவில் ஆட்டுக்கறி என்ற பெயரில் நாய்க்கறி விற்கப்பட்டதாக புகார் எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக அசைவ உணவு ஹோட்டல்களில் பல்வேறு முறை கேடுகள் நடப்பதாக கூறப்படும் நிலையில் ஜெய்ப்பூரில் கடத்தப்படும் நாய்க்கறி பெங்களூருவில் விற்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கறி மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.