2024 டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் ஆடுவதாக தெரிவித்துள்ளார். இந்த போட்டி நடைபெறும் மைதானம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் முகமது சிராஜிக்கு பதில் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6:00 மணிக்கு நடைபெறுவதாக இருந்த நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு, ஒத்திவைக்கப்பட்டு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்திய அணி : ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பன்ட், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பும்ரா.