உறுதிப்படுத்தும் சிசிடிவி காட்சி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தான் உண்மை குற்றவாளிகள் என்பதை நிரூபிக்கும் வகையில் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, இதில் காவல்துறையினரால் என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங்கை வெட்டும் காட்சிகள் உள்ளன. உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.