பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளுக்கு பண உதவி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், சமீபத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், ரவுடி ஆற்காடு சுரேஷின் தோழியான அஞ்சலையை, ஓட்டேரி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கெனவே 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது.