ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய, திருவள்ளூர் வழக்கறிஞர் அருள் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை ஏற்பாடு செய்து கொடுத்ததும், கொலைக்கு பிறகு ஆயுதங்களை பதுக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொடுத்ததும் அருள் தான் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.