பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆம்ஸ்ட்ராங்கை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.