சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று பிஎஸ்பி தேசியத் தலைவர் மாயாவதி நேரில் வருகிறார். ஆம்ஸ்ட்ராங் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.