ஆருத்ரா நிறுவன கிளை மேலாளர்களுக்கு ஜாமின் மறுப்பு ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், கிளை மேலாளர்கள் இருவருக்கு ஜாமின் வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலாளர்கள் அருண்குமார், ஜெனோவா ஆகியோரின் ஜாமின் மனுக்களை, நீதிபதி தமிழ்ச்செல்வி தள்ளுபடி செய்தார். அதிக வட்டித்தருவதாக கூறி, சுமார் 1 லட்சம் பேரிடம் ஆருத்ரா நிதி நிறுவன இயக்குநர்கள் ராஜசேகர், அவரது மனைவி உஷா ஆகியோர், ரூ.2,438 கோடி அளவிற்கு பணமோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.