திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராடிய ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அமைதியாக போராடியவர்களை கைது செய்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கைது செய்தவர்களை உடனே விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.