தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கடலோர சோதனை சாவடி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆறுமுகநேரி பகுதியில் இன்றும், நாளையும் குடிநீர் வினியோகம் இருக்காது என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.