கல்வராயன் மலையில் ஆளும் கட்சியின் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகின்றது என திமுக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கள்ளச்சாராயத்தால் கடந்த ஆண்டு 22 பேர் உயிரிழந்தனர். அரசு தற்போது தான் விழித்துள்ளது. கள்ளச்சாராயத்தால் தமிழ்நாட்டில் இனி ஒரு மரணம் கூட நிகழக் கூடாது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் மீதும் புதிய சட்டம் பாயுமா? என்ற கேள்வியையும் பிரேமலதா முன் வைத்துள்ளார்.