தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியோடு கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக, பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றார். மேலும், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் குறித்து ஆளுநர் ரவி தங்களிடம் வேதனை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.