கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதன்பின் பேட்டியளித்த இபிஎஸ், கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஆளுநரிடம் மனு அளித்ததாக கூறினார். திமுக ஆட்சியில் இதுபோன்று 2 அசம்பாவிதங்கள் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.