பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளில் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றுள்ளது. இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிக்கு சாதகமான சூழல் இருக்கும். ஆனால், அந்த நிலையை மாற்றி, பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல், மேற்குவங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வசம் இருந்த 3 தொகுதிகள் உட்பட 4 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.