பெரும்பாலான இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது வழக்கமாக இருக்கிறது. இதற்கு அரசியல் விமர்சகர்கள் பல காரணங்களை முன் வைக்கின்றனர். ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும், அதுமட்டுமே வெற்றியை தேடித்தருவதில்லை என்கிறார்கள். மாறாக, ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெறும் போது, அரசின் திட்டங்கள் விரைந்து கிடைக்கும் என மக்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, எதிர்த்து போட்டியிட்ட பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை விட கூடுதலாக 67,065 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. தற்போது திமுக 1,23,712, பாமக – 56,248, நாதக – 10,520 வாக்குகள் பெற்றுள்ளன.