மின் கட்டண உயர்வுக்கு நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் வென்ற பிறகு தந்திரமாக மின் கட்டணத்தை உயர்த்தும் அரசின் முடிவு, வாக்களித்த மக்களுக்கு செய்கிற பச்சை துரோகமாகும். இதுதான் திராவிட மாடலா? மக்களை வாட்டி வதைக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.