உத்தரபிரதேச மாநிலம் ஹாப்பூர் பகுதியில் ஒரே பைக்கில் 7 பேர் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்தவர்களுக்கு ஹாப்பூர் போலீசார் ₹9,500 அபராதம் விதித்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதே ஊரில் கடந்த ஆண்டு ஒரே பைக்கில் 7 பேர் பயணித்த போது ₹22,000 அபராதம் விதிக்கப்பட்டது.