தமிழ்நாட்டில் கள்ளு கடைகளை திறந்தால் மதுவிலக்கு சாத்தியப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். பணம் அதிகம் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் குடிப்பதில்லை என்று கூறிய அவர், விலை மலிவான சாராயத்தை குடிக்க நினைப்பவர்களுக்கு கல்லு கடைகள் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்றால் முதலில் கள்ளு கடைகளை திறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.