வாடிக்கையாளர்களிடம் கேஸ் நிறுவனங்கள் பயோமெட்ரிக் பதிவை சரிபார்த்து வரும் நிலையில் அதனை மேற்கொள்ளாதோருக்கு சேவை நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனை மறுத்துள்ள பெட்ரோலியம் இயற்கை எரிவாயு அமைச்சகம் போலிகளை களையவும் பயன்கள் உரியவரை சென்றடையவும் பயோமெட்ரிக் பதிவிடப்படுகிறது. இதை மேற்கொள்ளாதவர்களுக்கு சேவை நிறுத்தப்படாது எனவும் வழக்கம் போல கேஸ் விநியோகிக்கப்படும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.