பயனாளர்களை தகவல்களை அரசிடம் பகிர கூறி கட்டாயப்படுத்துவதால் இந்தியாவில் வாட்ஸ் அப் சேவை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என்று ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர் விவேக் டன்கா கேள்வி எழுப்பினார். இது குறித்து அந்நிறுவனம் எந்தவித தகவலையும் அரசிடம் பகிரவில்லை என்றும் நாட்டின் பாதுகாப்புக்காக தான் பயனாளர்களின் தகவல்களை பகிரச்சொல்லி கேட்டதாகவும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் பதிலளித்துள்ளார்.