எல்லைப் பகுதிகளில் சூழலை சரியாகக் கையாள இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்-யீ கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “இந்திய-சீன உறவு தொடர்பாக இருநாட்டு தலைவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து ஒற்றுமையை நடைமுறைப்படுத்தவும், இந்திய-சீன எல்லை பகுதிகளில் அமைதியை கூட்டாகப் பராமரிக்கவும் அஜித் தோவலுடன் இணைந்து பணியாற்றத் தயார்” என விருப்பம் தெரிவித்துள்ளார்.