இந்தியா – அமெரிக்கா உறவு தொடர்ந்து வலுப்பெறும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடனான சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உலகளாவிய பிரச்சனை, இருதரப்பு உறவு குறித்து விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் முக்கிய விஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.