மக்களவையில் நடந்த விவாதத்தில், பாஜகவினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்றும், அவர்கள் வன்முறை செய்பவர்கள் எனவும் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னை இந்துக்கள் என அழைத்துக் கொள்ளும் அனைவரும் வன்முறையாளர்கள் என ராகுல் தெரிவித்திருப்பதாகவும், இது இந்தியா கூட்டணியின் இந்துக்கள் மீதான வெறுப்பை காட்டுவதாகவும் சாடியுள்ளார்.